• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை வழங்கியது.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில் கேரம் போர்டு, செஸ் போர்டு, லூடோ, கால்பந்து, செட்டில் பேட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்கு வழங்கினார்.

அவர் பேசுகையில்: மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து உடலுக்கும் அறிவுக்கும் ஆற்றலை தரக்கூடிய விளையாட்டுக்களும் மிகவும் முக்கியம் என்றார்.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், அறிவழகன் பங்கேற்றனர்.
விடுதி பொறுப்பாளர் கார்த்திகேசன் நன்றி தெரிவித்தார்.