மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் செய்து ஆசியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இல் இடம்பிடித்த மாணவர்கள்.
மதுரை ஸ்ரீ கலாலயா அகாடமி சார்பாக திருப்பரங்குன்றம் சூட்டுக்கோவில் மாயாண்டி சுவாமிகள் மண்டபத்தில் தொடர்ச்சியாக பரதநாட்டியம், சிலம்பம் ,யோகா மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் செய்தனர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆசியன் புக் ஆஃப் ரெகார்ட் சார்பாக உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பரதநாட்டியம், யோகா, சிலம்பம் மற்றும் கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் 9 பிரிவுகளில் நடத்தினர்.
இதுகுறித்து கலாலயா அகடமி செயலாளர் அல்லி கூறுகையில்..=yபொதுவாக சாதனை என்றால் பரதநாட்டியம் நிகழ்ச்சி மட்டுமே சாதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஆனால் இங்கு மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பரதநாட்டியத்துடன் நாட்டுப்புற கலைகளையும் இணைந்து உலக அளவில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் பரதநாட்டியம் நாட்டுப்புற கலைகள் இணைந்து இவற்றுடன் சிலம்பம் யோகா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பரதநாட்டியத்துடன் நாட்டுப்புற கலைகளும் உலகளாவிய அளவில்மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது எனக் கூறினார்.