• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மும்மத கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆரோகிய அன்னை திருத்தலம், மற்றும் அல்மாமின் பள்ளிவாசலில்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பூரண குணமடைய வேண்டி மும்மத சமத்துவ சிறப்பு பூஜை, வழிபாடு, பிரார்த்தனை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் எஸ். எஸ். குருசாமி,வாடிப்பட்டி வடக்கு வட்டாரத் தலைவர் ஐ கே குருநாதன் , வட்டாரத் தலைவர்கள் பழனிவேல், சுப்பாராயல், செந்தில்குமார், காந்தி ,சிவானந்தம் நகர தலைவர் முத்துப்பாண்டி, பிசிசி ஜெயமணி, மாணவர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் சமயநல்லூர் சுரேஷ், வினோத், அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனைமுத்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, சக்கிமங்கலம் பாண்டி, அமைப்புசாரா மாவட்டத் துணைத் தலைவர் வருசை முஹம்மது உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.