• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பொது மேலாளர் மணி வணிகத்துறை துணை மேலாளர் சதீஷ்குமார் தொழில்நுட்ப மேலாளர் தயாள கிருஷ்ணன் சோழவந்தான் கிளை மேலாளர் முத்துராமு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் சோழவந்தான் தொழிலதிபர் எட்டாவது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருது பாண்டியன் எல் பி எஃப் நிர்வாகிகள் தலைவர் அமிர்தராஜ் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஏடிபி நிர்வாகிகள் தலைவர் சின்னன் செயலாளர் பாண்டி பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சி ஐ டி யு ராஜ்குமார் ஏஐடி யு சி சங்கையா ஐ என் டி யு சி தங்கமணி அம்பேத்கார் தொழிற்சங்க முத்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.