• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Feb 9, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலபைரவருக்கு பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை , நடைபெற்றது .வடமலை சத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.