• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் அமைந்துள்ள லா சலேத் சென்ற இடத்தில் காட்சியளித்த திருத்தலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சலேத் மாதாவின் சுரூபங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தலத்தை சுற்றி பாதுகாப்புக்காக பட்டியல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இன்று காலை அதிசயத்தக்க வகையில் சிறிய அளவிலான ஊற்று தோன்றியுள்ளது. இதனை அறிந்த சுற்றுவட்டார பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். அங்கு உருவாகிய புனித நீர் சேகரித்து பொதுமக்களுக்கு சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் தீர்த்தமாக வழங்கப்பட்டது.