• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி- கே. டி. ஆர் பேச்சு…

ByK Kaliraj

Feb 9, 2026

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லில் எந்தவொரு அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் தங்களை அதிமுகவில் இணைக்கின்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது :- இன்றைய அரசியல் என்பது படித்த மாணவர்கள் மத்தியில் இன்றைக்கு பேசும் பொருளாக மாறியுள்ளது.

அரசை நிர்ணயிக்கின்ற இடத்தில் மாணவர்கள் உருவாக வேண்டும். படித்தவர்களின் பற்றுதலோடு ஆட்சிக்கு வரக் கூடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நல்ல செயல்களைச் செய்வார்கள். படித்தவர்களுக்கு எல்லா விஷயங்களும் நன்றாகத் தெரியும்.

பாமரர்கள், உழைக்கின்ற வர்க்கத்தினர் வாழ வேண்டுமென்றால், படித்தவர்கள் அரசியலுக்கு வந்து உழைக்கின்ற மக்களுக்கு உறுதுணையாக இருந்து அரசியலைக் கற்றுக் கொடுத்தால்தான் விழிப்புணர்வு ஏற்படும்.

அதிமுகவில் இணைந்துள்ள நீங்கள் அதிமுக வெற்றிக்காக, இரட்டை இலை வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிப் பழனிச்சாமியை முதல்வராக்கப் பாடுபடுங்கள்.

பொற்காலத் தமிழகத்தை, உங்களுக்கான வறுமையில்லாத வசதியான வாழ்க்கையை, உங்களின் வாழ்வுக்குத் தேவையான வேலையை அதிமுக கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

சிவகாசி சட்டமன்றத் தொகுக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.