• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம்- ஆட்சியர் திறந்து வைத்தார்

சேலம் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார்…
சேலம் 3 ரோடு பகுதியில் அமைந்துள்ள நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவ சிகிச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறிப்பாக நமது நாட்டில் சுகாதாரத் துறையின் சார்பில் நரம்பியல் மருத்துவ அறிவியல் துறையில் வலிப்பு பற்றிய ஆய்வுகள் வலிப்புக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது மேலும் புதிய மருந்துகள், வலிப்புக்கான மூளை அறுவை சிகிச்சைகள், வலிப்புக்கான பிரத்தியேக மூளை ஸ்கேன் போன்றவற்றின் மூலமாக வலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.


இத்தகைய உயரிய சிகிச்சை முறைகள் அனைவருக்கும் கிடைக்க தமிழகத்தில் முதல்முறையாக உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் சதீஷ் சந்திரா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் மணி, நரம்பியல் துறை தலைவர் சிவக்குமார், மருத்துவர் பிரபாகரன், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்