• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சேலம் பகுதியில் ரூ. 5 லட்சம் செலவில் குடிநீர் ஆழ்துளை கிணறு- ராஜேந்திரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பல்வேறு பணிகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சியில் உள்ள வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 5 லட்சம் செலவில் சேலம் மாநகராட்சி 34 வது கோட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை அறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலமாக இரண்டு சின் டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு உள்ளது.


இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. 34 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.