


சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்வதற்கான முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அஞ்சலக துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமில், தங்களுக்குண்டான பாஸ்போர்ட் எடுப்பதில் மாணவ, மாணவியர் அதற்குரிய ஆவணங்களோடு ஆர்வத்துடன் பங்கேற்று சமர்ப்பித்தனர். மாணவ, மாணவியரின் ஆவணங்களை ஆய்வு செய்து சரி பார்த்த அஞ்சலக துறையினர், தகுதியுள்ள விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து சிரமமின்றி மாணவ, மாணவியருக்கு பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படுமென்று தெரிவித்தனர்.


தங்களது கல்லூரி மூலமாக மாணவ, மாணவியரின் சிரமத்தை போக்கும் விதத்தில் ஓட்டுனர் உரிமம்- பான்கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்களையும், அதேபோன்று ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்வது போன்ற சிறப்பு முகாமையும் தொடர்ந்து தங்களது கல்லூரியில் வளாகத்தில் சம்பந்தப்பட்ட அரசுகளின் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நடத்தி வரும் நிலையில், தற்போது தங்களின் கல்லூரியில் பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எளிய நடைமுறையில் பாஸ்போர்ட் கிடைப்பதற்கு ஆவண செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரியின் செயலாளர் ஏ. பி. செல்வராஜன் தெரிவித்தார்.

