• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்க சிறப்பு முகாம்!..

By

Aug 18, 2021

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் இலவசமாக வழங்குவதற்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில பாரத மார்வாரிகள் இளைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை சார்பில் திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான செயற்கை உறுப்புகளுக்கு 23.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் தேர்வு செய்யப்படவுள்ளது.

இதற்கான பதிவு முகாம் பாளையங்கோட்டை, பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் சிறப்புப் பள்ளி (மத்திய சிறைச்சாலை) எதிரில் வைத்து நடைபெற உள்ளது.

செயற்கை உறுப்புகள், கை, கால் மற்றும் காலிபர் போன்ற உபகரணங்கள் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3, ஆகியவற்றுடன் கலந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறும், மேலும் செயற்கை உறுப்புகள் செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்றும், தகவலுக்கு 9487858585 தொலைபேசி எண் அழைக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.