தமிழ்நாடு சினிமா ஆபரேட்டர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
கொரானா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தியேட்டர்கள் முறையாக திறக்கப்படாத காரணத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..
இதுகுறித்து மாநிலத்தலைவர் கேபி சுவாமிநாதன் கூறியதாவது; தமிழகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட சினிமா ஆபரேட்டர்கள் இருக்கின்றனர். இந்த குறைந்த காலத்தில் அரசு அறிவித்த நாள் முதல் இன்றுவரை திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதால் வாழ்வாதாரம் இன்றி இருந்து வருகின்றனர் .எனவே தியேட்டர்களை திறக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தார்.