• Thu. Apr 25th, 2024

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

ByA.Tamilselvan

Oct 21, 2022

தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் இன்று (அக்.21) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு முன்பு தினமும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:- இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1,437 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1765 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். 22-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் சென்னையில் இருந்து 1,586 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,620 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1,195 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,985 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6, 300 பேருந்துகள், 10,588 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *