• Sun. Jun 16th, 2024

மானாமதுரை வங்கியில் திருட முயன்ற குற்றவாளியைப் பிடித்த போலீஸாருக்கு SP பாராட்டு

ByG.Suresh

May 22, 2024

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள பொதுத்துறை வங்கியில் திருட முயன்ற குற்றவாளியை 24 மணிநேரத்தில் பிடித்த தனிப்படை போலீஸாருக்கு புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மானாமதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் மே 19 -இரவில் திருட முயன்ற வழக்கில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மானாமதுரை இன்னாசி முத்துநகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பிரசாந்த்(34) என்பவரை கைது செய்தனர்.

குற்றச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைதுசெய்த தனிப்படை ஆய்வாளர் நாகராஜன் தலைமைக் காவலர்கள் வேல்முருகன், பிரபு, முதல் நிலைக் காவலர்கள் சதீஷ்குமார், சக்கர மணிகண்டன், ராஜா, நாகமணிமாறன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *