• Tue. Feb 18th, 2025

கருங்குளம் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு

ByG.Suresh

May 23, 2024

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள நாவல் கணியான் மடம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 காளைகளும், ஒரு அணிக்கு 9 பேர் வீதம்135 வீரர்கள் கலந்து கொண்டனர். வட்டமான அமைக்கப்பட்ட திடலில் நடுவே கயிற்றில் கட்டப்பட்ட காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்தில் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டன. போட்டியினை தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்களும், ரொக்க பரிசும் விழா குழுவினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் காளைகள் முட்டியதில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியினை கல்லல், கருங்குளம், காளையார்கோவில், வெற்றியூர், அரண்மனை சிறுவயல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாகஇன்று மதியம் சுமார் 2 மணி அளவில் கண்டுகளித்தனர்.