சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் இளைஞர் ஒருவரை தலையில் வெட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சிவகங்கை வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் நிதிஷ். 24 வயதான இவர் சென்னையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து அன்மையில் சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகேவுள்ள பெட்டிக்கடை வாயிலில் நின்றிருந்தபோது அங்குவந்த மர்ம கும்பல் நிதிஷ்ஷை சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலையில் படுகாயம் அடைந்த நிதிஷை மீட்ட உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நிதிஷ் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிவகங்கை காவல்துறை வெட்டிவிட்டு தப்பி சென்ற குற்றவாளிகளை தேடிவருகின்றனர். 6 பேர் சேர்ந்து முன்பகை காரணமாக வெட்டியதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.