• Sat. Feb 15th, 2025

இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு

குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு பிறப்பித்தார். வியாபாரிகள் சங்கத்தினர் எஸ்பிக்கு நன்றி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முடிவை பரிசீலனை செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸிடம் முன் வைத்து வந்தனர். இரவு நேர தேனீர் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாட்டுகளுடன் இரவு நேர தேநீர் கடைகள் மீண்டும் செயல்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் தடையை நீக்கி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.