• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தென்மேற்கு பருவ மழை.. காத்திருக்கும் கன மழை..

Byகாயத்ரி

Aug 24, 2022

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.