• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்கிறார்

ByA.Tamilselvan

Aug 24, 2022

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவபரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். சிகிச்சை முடிந்து திரும்பி வரும் வழியில் அவர் இத்தாலி சென்று தனது தாயாரை சந்தித்து பேசிவிட்டு டெல்லி திரும்புவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சோனியா எந்த நாட்டுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்? எப்போது செல்கிறார்? என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சோனியாவுடன் அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.