• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி(78) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 21) அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமான சில மருத்துவக் கவனிப்புகள் அவருக்கு தேவைப்படுவதாகவும், அதன் காரணமாக பரிசோதனைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.