• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரோந்து வாகனத்தில் சூரிய சக்தி சிசிடிவி கேமரா -திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாதனை

Byதரணி

Mar 21, 2023

தமிழ்நாட்டில் முதன்முறையாக நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் (சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமரா அமைத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாதனைபடைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது.


மேற்படி நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன், இ.கா.ப. அறிவுரையின்படி சூரிய சக்தியுடன்(சோலார்) இயங்க கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களை இன்று திருநெல்வேலி மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர்‌ சரவணன் ஐபிஎஸ் நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் தான் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களில் சூரிய சக்தியில்(சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்ற சம்பவங்களையும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்க முடியும் எனவும், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு ஆய்வாளர் .ராஜேஷ், தொழிற்நுட்ப பிரிவு ஆய்வாளர் . கிருஷ்ணசாமி, உதவி ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உடனிருந்தனர்.