• Fri. Apr 19th, 2024

அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரி

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

நிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி
திருநகரில் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியை முன்னிட்டு காங்கிரஸ் கொடியேற்ற விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிகட்சி சார்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றி விழா கொண்டாடப்பட்டது.இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினார்மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார் 94வது மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சக்தியன் முன்னிலை வகித்தார். மாநில சட்டத்துறை தகவல் அறியும் பிரிவு துணை தலைவர் கொராடு சத்தியன் வரவேற்புரை கூறினார்.இந்திய ஒற்றுமையாத்திரை பயண வெற்றி விழா கொடியேற்றிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அடிகிரி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது


கேரள காங்கிரஸ் கட்சியும், தமிழக காங்கிரஸ் கட்சியும் இணைந்து வைக்கம் நூற்றாண்டுவிழா வரும் 28ம் தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.நிதிநிஅறிக்கை குறித்த கேள்விக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான திட்டத்தை முன் மாதிரியாக கொண்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன் வைத்துள்ளார் நிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்குஎதிர்கட்சி என்பது பேச வேண்டும் விளம்பரம் கருதி செய்கிறார்கள்.ராகுல் காந்தி ஐரோப்பியமுற்றுப் பயணத்தில் இந்தியாவை விமர்சனம் செய்ததாக பாஜக கூறுவது கண்டனத்திற்குரியது இந்தியா ஜனநாயகமானது அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போது உலக நாடுகள் முன் வர வேண்டும் என தான் கூறியுள்ளார்.
அதானே சொன்னால் பாஜகவிற்கு ஏன் கோபம் வருகிறது பங்குச்சந்தையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்களின் பங்குகளை பெருமளவு முதலீடு செய்து இழப்பீடு ஏற்பட்டதற்க்கு பாஜகதான் காரணம்.இதற்கு முன்னதாக எத்தனையோ தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள டாடா , பிர்லா , டிவிஎஸ் ,பாரி போன்நிறுவனங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் நிதி உதவி செய்யாமல் அதானி குடும்பத்திற்கு மட்டும் நிதி உதவி செய்வதற்கு காரணம் என்ன அதற்கு எந்த வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட்டதுஇதைக் குற்றம் சொன்னால் பாஜக அதானிக்கு வக்காலத்து வாங்குகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு
காவல்துறையும், சட்டம் ஒழுக்கும். முதல்வரின் கையில் உள்ளது. பிரச்சினையை கண்டு கொள்ளாமல் விட்டது தான் தவறு பிரச்சினைகளை நியாயப்படுத்தினால் தான் தவறு. ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது குற்றவாளிகள் உண்மையாக தண்டிக்கப்படுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து என்று கூறுவது ஏற்புடையதல்லஎன கே.எஸ்.அழகிரி கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *