75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய ,மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளில் சுதந்திரதினத்தை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டு வருகின்றன.மேலும் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனை மேலும் வலியுறுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்து தமிழக மக்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு நிறைவடைவதை வணங்கும் விதமாக பொதுமக்கள் வீடுகளில் தேசியகொடி ஏற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நம்நாடு சுதந்திரம் அடைவதற்குபல லட்சம் மக்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜாதி மதம்,கட்சி என்றபாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியகொடி ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார்.