

கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்த நாளில் சமூக சிந்தனையாளர், பேராசிரியர், முதுமுனைவர், வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி இந்நாளில் கூறி இருப்பது:-

கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளை தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சி உருவாக்கினார் காமராஜர். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப இலவச மதிய உணவுத் திட்டத்தினை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார். விவசாய தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடைய செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகளைக் கட்டி விவசாயத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என்று பெருமித்ததுடன் கூறினார்.
