• Fri. Apr 26th, 2024

ஸ்மித் – லபுஸ்சேன் இரட்டை சதம்
ஆஸ்திரேலியா 598 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் ஆடியது போலவே இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை லபுஸ்சேன் வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் 402 ஆக இருந்தபோது லபுஸ்சேன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்து அசத்தினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும் இரட்டை சதம் அடித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வேட் – சந்தர்பால் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *