• Sat. Jul 20th, 2024

திரையுலகில் எஸ்.கேயின் 10 வருட பயணம்!..

சிவகார்த்திகேயன் முதன்முறையா நடிச்ச படம், மெரினா வெளியாகி 10 வருஷமாகுது! அதாவது சிவகார்த்திகேயன் திரையுலகில் அடியெடுத்து வைச்சு 10 வருடங்கள் ஆச்சு!.

விஜய் டிவியில ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பின்னாள்-ல்ல தனது திறமையால பெரும்பாலான சின்னத்திரை நிகழச்சிகள தொகுத்து வழங்கினார். மிகவும் கலகலப்பாக அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர செஞ்சது! சிவகார்த்திகேயனுக்காகவே விஜய் டிவி நிகழ்ச்சிகளப் பார்ப்பவர்கள் ஏராளம்.

அந்த சமயத்துலதான், சிவகார்த்திகேயன் பாண்டிராஜூவோட மெரினா படத்தில் நடிச்சாரு! தொடர்ந்து 3 படத்தில் தனுஷ் கூட நடிச்சாரு! அந்தப் படத்தில சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றிபெற்று அவர தமிழ்-ல்ல முன்னணி நடிகராக்கியது.

நடிகர் விஜய் ஒரு விழாவில் அவர் குழந்தைகளை பிடிச்சிட்டாரு அப்டினு புகழ்ந்தாரு! நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு குழந்தைகள அதிகம் கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு அமைஞ்சது!

வெற்றி தோல்விகள கடந்து அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடியதாக இருந்து வருது! நடிகரா மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக பயணம் செஞ்சுட்டு வறார், எஸ்.கே! ஒரு நடிகராக அவர் தன்னை நம்பினது மட்டுமே, இப்போ அவர் வளர்ச்சிக்கு காரணம். நடிப்பு, நடனம் என நடிப்போட அத்தனை பரிணாமங்களையும் ஜொலிச்சுட்டு இருக்காரு!

கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமா மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது வெளியான அவரோட டாக்டர் திரைப்படம் பெரும் வெற்றிபெற்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. திரையரங்குகளில் 50 சதவிகித இடங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட நிலையில் வெளியான இந்தப் படம் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செஞ்சது!

தற்போது தெலுங்கிலும் கால் பதிக்கிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில நடிக்க போராரு! இப்போ கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீராமாகவே ரசிகர்கள் பார்க்கிறாங்க!

எந்தப் பின்னணியும் இல்லாமல் திரையுலகில நுழைஞ்சு தமிழின் முன்னணி நடிகராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது வெற்றி சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நம்பிக்கை கொடுத்திட்டு வருது!

வழக்கமா பக்கத்து வீட்டு பையன் பாத்திரம் மட்டுமே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்ட போக்கி, கனா போன்ற வித்தியாசமான முயற்சிகளையும் அவர் எடுத்திருக்காரு! ரெமோ படத்தில பெண் வேஷம் போட்டும் அசத்தினாரு! எதிர்நீச்சல் என்ற அவரது படத் தலைப்புக்கு ஏற்ப பல்வேறு சவால்களைக் கடந்து ஜெயிச்சிருக்கும், சிவகார்த்திகேயனின் பெயர் நாளைய திரையுலக வரலாற்றில நிச்சயம் இடம் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *