

தமிழகம் முழுவதும் பருவ மழை வெல்லுத்து வாங்கிவரும் சூழலில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளும், சுரங்கப் பாதைகளும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்னும் மழை ஓய்ந்த பாடில்லை. பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் ரயில் தடத்தை ஆறாக மாற்றியுள்ளது மழை வெள்ளம்.
