• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்…

ByG.Suresh

Jun 16, 2024

சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிவகங்கை மானாமதுரை சாலையில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தை சிவகங்கை நகர மன்ற தலைவர் துரை ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தகனமேடை எவ்வாறு செயல்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கையாளப்பட்டு, பராமரிக்கப்படுகின்றதா, மின் வசதி, தண்ணீர் வசதி, இருக்கின்றதா மேலும் தேவைகள் என்ன, என்று ஆய்வு செய்தனர். பின்னர் வளாகத்தை சுற்றிப் பார்த்தவர்கள், வளாகத்தில் ஆடு மாடுகள் உள்ளே வராமல், மரம் செடிகளை முறையாக பராமரிக்கவும், குப்பைகள் சேராதவாறு வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.