சிவகங்கை உதயமான தினத்தை சிவகங்கை அரண்மனை வளாகத்தில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ண தேவர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபட்டனர்.
சிவகங்கையின் முதல் மன்னர் முத்து விஜய ரகுநாத கௌரிவல்லப சசிவர்ண பெரிய உடையணத் தேவரால் தோற்றுவிக்கப்பட்ட சிவகங்கை சீமையின் உதயதினம் இன்று சிவகங்கை அரண்மனை வளாகத்தில் ராணி D.S.K. மதுராந்தகி நாச்சியார் தலைமையில், இளைய மன்னர் மகேஸ்துரை முன்னிலையில் நடைபெற்றது.
விஜய ரெகுநாத கௌரி வல்லப சசிவர்ண பெரிய உடையணத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பள்ளி மாணவ, மாணவியர் நகரின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செய்தனர். சிவகங்கை சீமையைச் சேர்ந்த சமூக,கலை. இலக்கிய துறைகளில் தன்னலமற்ற சேவை புரிந்த சான்றோர்கள் தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன், வரலாற்று ஆய்வாளர் மு.பாலகிருஷ்ணன் பேராசிரியர், விவேகானந்தம் கவிஞர் இலக்கியா நடராஜன்
மருத்துவர். M.அப்துல் முத்தலீப் திருப்பணிச்செல்வர், ராதா தொல்லியல் ஆய்வாளர் புலவர். காளிராசா ஆகியோரை அரண்மனை சார்பில் கௌரவிக்கபட்டது.

பேராசிரியர், விவேகானந்தம் எழுதிய சிவகங்கை சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத் தேவர் என்ற நூலை ராணி மதுராந்தகி நாச்சியார் வெளியிட முதல் பிரதியை புலவர் பகீரத நாச்சியப்பன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மன்னர் கால பாரம்பரிய கலைகளான சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, வளரி, கொம்புச்சண்டை போன்ற வீர விளையாட்டுகளை மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளாக நடத்தி அசத்தினர்.
