• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சார் ஸ்கூல் லீவா…ட்விட்டரில் அதிரடி பதில் அளித்த ஆட்சியர்

Byகாயத்ரி

Nov 19, 2021

பள்ளி விடுமுறையா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம், ‘இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்கு பதில் அளித்த ஆட்சியர், நாளை உன் பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும்’ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, இரண்டு முறை மாணவர்கள் பள்ளி விடுமுறை குறித்து ட்விட்டரில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.அதற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டிபொறுமையாக பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாணவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அதிர்ச்சியாகும் வகையில் பதில் அளித்துள்ளார்.