• வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..
அதனால் நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள்.
• உழைப்பின் சக்தியே உலகிலே உயர்ந்த சக்தி..
அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது.
• எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை
சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை
வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.
• ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்;
நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
• தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.