• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மார்கழியில் மக்களிசை மேடையில் பாடகர்சித் ஸ்ரீராம்.

நீலம் பண்பாட்டு மையம் இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியைமதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடத்தியது இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஆறாவது நாளாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “Hip Hop & Rap” என பெயரிடப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்கள் “இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிக பெருமையாக இருக்கிறது” நான் வெகுவாக ரசித்தேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேடையில் பாடினார் சித் ஸ்ரீராம்.


முற்போக்குகவிஞர் தனிக்கொடி “மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்இதனை தொடர்ந்து பேசிய ஓவியர் அனிதா ரஞ்சித் “இசைக்கலைஞர்கள் மார்கழியில் மக்களிசை மேடையில் சிறப்பாக பாடினார்கள்” என்றார் நடிகை ரித்விக்கா மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் மக்களிசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ப்பட்டது.