

பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ளது! இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்க உள்ளன! இதில் மும்பை அணி சி பிரிவில் மகாராஷ்டிரா சர்வீசஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான 20 ஓவர் போட்டி கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக பிரித்வி ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை அணியில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். 22 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என ஆல்-ரவுண்டராக விளங்கி வருகிறார்.
ரஞ்சி கோப்பையில் இது முதல்முறை என்றாலும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார். அரியானா அணிக்காக அவர் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்துள்ளார் அதில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். புதுச்சேரி அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் 4 ஓவர் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
கடந்த ஐபிஎல் போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கரை எந்த அணியும் முதலில் தேர்வு செய்யவில்லை. பின்னர் ஏலம் முடியும் தருவாயில் மும்பை அணி அவரை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. அதனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் மகன் என்பதால் இந்த ரஞ்சி வாய்ப்பு கிடைத்துள்ளது என பலராலும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகின்றன. அர்ஜுன் சிறப்பாக விளையாடுகிறார் என்பதால்தான் அணியில் தேர்வு ஆகி உள்ளார் எனவும் தேர்வு குழு தலைவர் சலீல் அங்கோலா தெரிவித்துள்ளார்.
