• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் மதுரை வருகை ஒட்டி 2000 போலீசார் பாதுகாப்பு..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை காலை சென்னையில் இருந்து சிறப்பு விமான மூலம் 11 மணியளவில் மதுரை விமான நிலையம் நடக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் பெருங்குடி மண்டேலா நகர் மற்றும் சிந்தாமணி சுற்றுச்சாலை வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குகிறார்.

பின்னர் காந்தி மியூசியத்தில் நடைபெறும் அரசு நலதிட்ட விழாவில் கலந்து கொள்கிறார்

பின்னர் மாலை 4 மணியளவில்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்ல உள்ளார்.

முதல்வர் விஜய் மதுரை வரும் நிகழ்வினை ஒட்டி மதுரை விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் மத்திய தொழிலில் பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினரால் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டது.

மேலும் விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி மண்டேலா நகர் சிந்தாமணி விருதுநகர் சுற்றுச்சாலை கருப்பாயூரணி வழியாக முதல்வர் விஜய் செல்வதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் இரும்பு பேரிகார்டுகள் ,சவுக்கு மரங்களைக் கொண்டு தடுப்பு வேலிகள்அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் மதுரை வருகுதால் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்ப்பால் ஆட்கள் வராதஅவனியாபுரம் புறவழிச் சாலை சிந்தாமணி புறவழிச்சாலை விரகனூர் கருப்பாயூரணி சாலை பகுதிகளில் தடுப்பு வழிகள் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல்வர் விஜய் வருவதால் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ட்ரோன் மற்றும் பறக்கும் எந்தவித பொருளும் உபயோகப்படுத்தக் கூடாது என மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.