• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பகுதியில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகள்..,

மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆணைக்கிணங்க மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வினி ஆகியோர் வழிகாட்டுதலில் வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள்

மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், சோழவந்தான் பேரூராட்சி ஆலங்கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி மற்றும் நாச்சி குளம் ஊராட்சி நாச்சி குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் தங்கும் விடுதிகளில் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாணவ மாணவிகள் சமூக நீதி விடுதி வளாகங்களில் கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் நடந்தது. இதன் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இரவிச்சந்திரன் தலைமையில் சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெசி, மேலக்கால் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் கிருஷ்ணன்,டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.