• Thu. Jun 8th, 2023

மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு..இனி இவர்தான் பிபி அல்டிமேட்டில் …

Byகாயத்ரி

Feb 24, 2022

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *