நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்தப் படம். ட்விட்டரில் வலிமை மற்றும் போனி கபூர் ட்ரெண்டிங்கில் உள்ளனர். படத்தை ரசிகர்களுடன் போனி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் சென்னையில் திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளனர்.
அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்டவற்றையும் அவர்கள் திரையரங்குகளில் செய்ததை பார்க்க முடிந்தது. இதுமட்டுமின்றி போனிகபூர் காருக்கும் அவர்கள் பாலபிஷேகம் செய்தனர். இதனிடையே படத்தின் வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடின உழைப்பிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் ஆர்யாவும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல இயக்குநர் வெங்கட்பிரபு, வரலட்சுமி சரத்குமார், பார்வதி, கௌதம் கார்த்திக், கலையரசன், ரம்யா சுப்ரமணியன், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதை தவிர்த்து மகேஷ்பாபு உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

