• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சித்தர்களை சிறப்பித்த பட்டுக்கோட்டை மூலிகை கண்காட்சி!…

By

Aug 18, 2021

பட்டுக்கோட்டையில் சித்தர்களின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக மூலிகை நூல்கள் மற்றும் அரிய மூலிகைகளின் கண்காட்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நல்வழிக்கொல்லை சித்தர் மடத்தில் வெங்கட சுப்பையா சுவாமிகளின் 155 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை நடைபெற்றது.

இதில் சித்தர்களின் வரலாறு ,மருத்துவ முறைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியவை அடங்கிய புத்தகங்கள் அடங்கிய புத்தக கண்காட்சி நடைபெற்றது.

மேலும் பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குறிப்புகள் அடங்கிய நூல்களின் கண்காட்சியும், மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை மூலிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்நிகழ்ச்சியை ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கண்காட்சியில் கண்டு ரசித்தனர்.