• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலவச வீட்டு மனை பட்டாவிற்கு இடத்தை அளவீடு செய்து தர கோரி முற்றுகை..,

ByP.Thangapandi

Oct 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி, மாமரத்துப்பட்டி, நாட்டாபட்டி, அன்னம்பாரிபட்டி, மாதரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 2002 முதல் 2025 வரை 200 க்கும் மேற்பட்ட பட்டா அரசு தரப்பில் வழங்கப்பட்டது.,

இந்த நிலையில் மேக்கிழார்பட்டி அருகே புதுப்பட்டியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை முறையாக அளவீடு செய்ய கோரி நேற்று சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

அதனைத் தொடர்ந்து இன்று 153 இலவச இ -பட்டா வைத்தவர்களுக்கு மட்டும் அளவீடு செய்வதாக கூறப்படும் நிலையில் அளவீடு செய்ய வந்த தனி வட்டாச்சியர் பிரபாகரனை பழைய பட்டா வைத்தவர்களுக்கும் இடம் அளவீடு செய்ய வேண்டும் என முற்றுகையிட்ட நிலையில் முற்றுகையிட்டவர்களிடமிருந்து தப்பி நடந்து சென்றார்.,

இதனை கண்ட பொதுமக்கள் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.,

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை_ தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,