அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.,
வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய அரசு பேருந்துகள் வழங்கப்பட்டன இந்த நிலையில்.,

மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையத்திற்கு இன்று காலை மதுரையிலிருந்து வந்தஅரசு நகரப் பேருந்து மீண்டும் செக்காணூரணியிலிருந்து மதுரை செல்வதற்காக புறப்பட்டது.,

இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து 50 அடி தூரம் சென்ற பேருந்து பழுதடைந்து நடுரோட்டில் நின்றது.,
ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பேருந்தை இயக்க முடியாததால் பயணிகளை கீழே இறங்கி பேருந்தை தள்ளி விடும்படி ஓட்டுனர் கூற பேருந்தில் பயணித்த ஆண் பயணிகள் கீழே இறங்கி பேருந்தை தள்ளிய போதும் பேருந்து இயங்கவில்லை.,
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி மாற்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.,
பேருந்தில் பயணிக்க கட்டணம் செலுத்தி பேருந்தை தள்ளிவிடும் நிலைமைக்கு வந்து விட்டோமே எனஆண் பயணிகள் புலம்பியபடி சென்றனர்.,
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.,




