• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மழைநீர் தேங்கி நோயாளிகள் அவதி..,

ByKalamegam Viswanathan

Oct 8, 2026

மதுரையில் பெய்த திடீர் மழை காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினசரி வந்து செல்லும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி இல்லாததால் சிறிய மழைக்கே வளாகம் முழுவதும் தண்ணீர் குளம்போல் தேங்குகிறது.

தற்போது பெய்த திடீர் மழையால் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு வார்டு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளில் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நடக்க முடியாத நோயாளிகளையும், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களையும் தண்ணீரில் மிதித்தபடியே தூக்கிச் செல்லும் அவல நிலை நிலவுகிறது.

மேலும், தேங்கியுள்ள மழைநீரில் கழிவுநீரும் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகமுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றவும், மழைநீர் வடிவதற்கு நிரந்தர தீர்வு காணவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.