• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செயின் பறிப்பில் ஈடுபட்ட பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு…

ByKalamegam Viswanathan

Oct 22, 2024

தீபாவளியை முன்னிட்டு கணவருடன் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது.

மதுரை பந்தடி பகுதியில் சேர்ந்தவர் துவாரகநாத் -மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

இந்த நிலையில் கணவர் வாகனத்தை நிறுத்தி மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்போது அவரை பின்தொடர்ந்து விலையுரிந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முற்பட்டனர்.

மஞ்சுளா தனது கழுத்தில் மூனே முக்கால் பவுன் தங்க செயினை பறிக்க முயன்றதில் மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தர என சாலையில் இழுத்தவரே வாகனத்த்தில் வேகமாக இயக்கி சென்றனர். இதில் ஜெயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது. தற்போது இச்சம்பவத்தினுடைய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் மாட்டுத்தாவணி கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டில் முன்பு வாகனத்தை நிறுத்தும்போது பின் தொடர்ந்த மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலையுயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார்.? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை கண்டறிந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும் தற்போது தெற்குவாசல் போலீசார் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.

இதேபோல் மற்றொரு சிசிடிவி காட்சியில் பந்தடி 7 வது தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இரண்டு சிறார்கள் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து சாவகாசமாக வீட்டிலிருந்து வெளியே வரும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. அதில் சிசிடிவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் இருந்த 3000 ரூபாய் பணம் திருடு போனதும் தெரிய வந்தது. மேலும், தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு கீழவாசல் மற்றும் தெற்கு மாசி வீதிகள் விளக்கத்துடன் ஆகிய பகுதிகளில் ஏராளமானூர் கடை அமைத்து இருப்பதால் இப்பகுதிகளில் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.