உசிலம்பட்டி அருகே எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெறாத போலி பத்திர எழுத்தர்கள் மூலம் அதிகப்படியான போலி பத்திரங்கள் பதிவு செய்யப் படுவதாகவும் – பதிவு செய்த போலி பத்திர பதிவை ரத்து செய்ய முடியாமல் தவிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது சார் பதிவாளர் அலுவலகம்., இந்த அலுவலகத்தின் அருகிலேயே முறையான அனுமதி பெறாத பத்திர எழுத்தர்கள் அலுவலகங்கள் அமைத்து போலி பத்திர பதிவுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.,
அவ்வாறு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தச்சபட்டியைச் சேர்ந்த ராமர் என்ற விவசாயியின் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் போலி பத்திர எழுத்தர் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வேறு ஒருவருவருக்கு போலியாக பத்திர பதிவு செய்ததை கண்டறிந்து சுமார் 7 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.
இந்த போலி பத்திர பதிவை ரத்து செய்து தனது சொந்த இடத்தை மீட்டு தர கோரி சார் பதிவாளர் முதல் தலைமை செயலகம் வரை பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.,
மேலும் தற்போதும் இது போன்ற அனுமதி பெறாத போலி எழுத்தர்கள் மூலம் எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் மூலம் போலி பத்திர பதிவுகள் தொடர்வதாக தெரிவித்தார்., மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து போலி பத்திர பதிவுகளை தடுப்பதோடு, அனுமதி பெறாத போலி பத்திர எழுத்தர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.