• Wed. Mar 26th, 2025

சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் பெருவிழா

ByB. Sakthivel

Feb 27, 2025

பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாதனின் அருளைப் பெற்று சென்றனர்.

புதுச்சேரி பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் நடை பெற்ற சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அடுத்த மதலப்பட்டு ஊராட்சி பெரிய காட்டுப்பாளையம் சிவஅரி நகரில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கநாதர் திருக்கோயிலில் சிவன் இரவு பெருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அருள்மிகு மகாலிங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் திருவாசக முற்றோதல் சொற்பொழிவு ஐயா சிவப்பிரகாசம் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அறுசுவையுடன் அன்னதான விருந்து அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் ஆனந்தன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தொடர்ந்து மகாலிங்கநாதருக்கு முதல் கால வழிபாடும் இரவு 9.00 மணிக்கு இரண்டாம் கால வழிபாடும் இரவு 12.00 மணிக்கு மூன்றாம் கால வழிபாடும் காலை 5.00மணிக்கு நான்காம் கால வழிபாடும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமூலர் மடம் சிவசக்தி சேவை அறக்கட்டளை ஜெ.சி செந்தில்குமார் மற்றும் சிவ ஜோதி, சங்கரி சங்கரநாராயணன் அம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அன்பே உறுவாய் கொண்ட நாதனைகண்டு பாடிப்பரவி அருட்கடலில் நனைந்து மகாலிங்கநாதரின் அருளை பெற்றுச் சென்றனர்.