• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சாய்தன்ஷிகா நடிப்பில் ‘ஷிகாரு’ டிரைலர் வெளியீடு

தமிழில் யோகிதா என்ற படத்தில் நடித்து வரும் சாய் தன்ஷிகா, தெலுங்கில் ஹரி கொலைகானி இயக்கத்தில் ஷிகாரு என்ற படத்தில் நடித்து ள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அபிநவ் மெடி செட்டி, தேஜ், அன்னபூர்ணா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் வி.வி.விநாயக் நேற்று வெளியிட்டுள்ளார். டிரைலர் தொடங்கி இறுதி வரை நகைச்சுவைக் காட்சிகளாக நிறைந்துள்ளது. சாய் தன்ஷிகா அழகாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். முக்கியமாக பாபி என்று கல்லூரி மாணவருடன் சில காரணங்களால் வீட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்ணாக தன்ஷிகா நடித்துள்ளார். என்றாலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டிருப்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது.