சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி சிவகாசி நாராயணபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன.
ஆகையால் துணை மின் நிலையத்தில் இருந்து பாறைப்பட்டி, விஸ்வநத்தம், நாராயணபுரம் ரோடு, ஜக்கம்மாள் கோவில் பகுதி ,காரனேஷன் காலனி, பழனி ஆண்டவர் காலணி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மேலும் நேரு ரோடு, தபால் தந்தி நிலையம் பகுதி, பராசக்தி காலணி, வடக்கு ரதி வீதி, வேலாயுத ரஸ்தா, பள்ளபட்டி, லிங்காபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணா நகர், அம்மன் நகர், காமராஜபுரம், ஐஸ்வர்யா நகர்
மற்றும் அரசன் நகர் , பர்மா காலணி, போஸ் காலணி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர் ,முருகன் காலணி, எம்ஜிஆர் காலனி, மீனாட்சி காலணி ,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் 27ம்தேநி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரி பத்மா கூறியுள்ளார்.