• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பிரளயநாதசிவன் கோவிலில் சனி மகாபிரதோஷ விழா

ByN.Ravi

Aug 18, 2024

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில்நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்து சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் உட்பட சிவபக்தர்கள் ஏராளமானவர்கள் சிவசிவ என்று கூறி சுவாமி அம்பாளுடன் பின் தொடர்ந்து வலம் வந்தனர். சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் குவிந்தனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். இதே போல் திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவில்ஆகிய சிவாலயங்களில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.