• Thu. Oct 10th, 2024

வெட்கம்கெட்டவர்கள்… ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு கே பி முனுசாமி பேட்டி

ByKalamegam Viswanathan

May 9, 2023

ஒபிஎஸ் குறித்த கேள்விக்கு “வெட்கம்கெட்டவர்களைப் பற்றி பேச வெட்கமாக இருக்கிறது” எனமுன்னாள் அதிமுக அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி
“மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய அதிமுக குழுவினர் 3 இடங்களில் ஆய்வு.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையன்குளம், 3 புளியமரம் தனியார் கல்லூரி”சிந்தாமணி டோல்கேட் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையிலான குழுவினர் மாநாடு நடைபெறும் இடம் குறித்து ஆய்வு செய்தனர்.குழுவில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி.செல்லூர் ராஜு, உதயகுமார் |கே பி முனுசாமி மாநாடு இடம் குறித்து மூன்று இடங்களில் ஆய்வு செய்தனர்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி கூறும் போதும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்ய மூன்று இடங்களை பார்வையிட்டோம் இதன் விவரங்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தெரிவிப்போம் அதை தொடர்ந்து அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதன் அடிப்படையில் மாநாடு நடைபெறும்.
திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகள் குறித்த கேள்விக்கு.ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வந்த பல்வேறு திட்டங்களை நிறுத்திய சாதனைதான் திமுக ஆட்சி
கருவிலே உள்ள குழந்தை முதல் கல்லறை செல்லும் வயது முதிர்ந்த மனிதர் வரை அவர்களுக்கு ஏற்றவாறு நலத்திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்தார் இன்றைய அரசு பல்வேறு திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறது
நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சருடைய மருமகனும் மகனும் இணைந்து 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த இருக்கிறார்கள் அதை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என தடுமாறி கொண்டிருப்பதாக சொல்கிறார்.’தற்போது ஊழல் ஆட்சி தான் மேலோங்கி இருக்கிறது மக்களுக்கு எந்த பணியும் செய்யவில்லை என்பது தெரிகிறது.மத்திய தொகுதியில் நிதியமைச்சரின் பெயரை அழித்துவிட்டு திமுக கூட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு
உண்மை எப்பொழுதுமே சுடும் தியாகராஜன் மூலமாக இவர்கள் செய்து தவற்றை முழுவதும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்
ஏற்கனவே கழகத்தினுடைய பொதுச்செயலாளர் இதுபோன்ற ஊடகவியலின் மூலாகவும் பொதுக்கூட்டத்திலும் தெளிவாக சொல்லியிருக்கிறார் தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து திமுகவினர் கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வு இந்த அரசால் செய்ய முடியவில்லை மணல் கொள்ளை அடிக்கின்றவர்கள் எல்லோருமே இப்பொழுது திமுக கழகத்தில் நிர்வாகத்தில் இருக்கின்றனர்
ஆண் கொள்ளை அடித்தவர்களை தடுத்த கிராமங்களில் அலுவலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால் சட்டமே அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட கணத்தினால் கொலை செய் அவர்களை கூட உறுதியாக அவர்களால் கொண்டுவர முடியவில்லை
ஒபி எஸ் சபரீசன் சந்திப்பு குறித்த கேள்விக்கு? வெட்கம் கெட்டவர்களை பற்றி பேச வெக்கம்மாக இருக்கிறது
என கே பி முனுசாமி கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *