
மதுரை ஆனையூர் பகுதியில் அமைந்துள்ள சி.இ.ஓ.ஏ பள்ளியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கல்விக் குழுமத்தின் தலைவர் பேசும்போது
நீட் தேர்வு வருவதற்கு முன் முந்தைய ஆண்டுகளில் தமிழகத்தில் 100 சதவீத மாணவர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் எவ்வித காத்திருப்பும் இன்றி தன் முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவக்கல்லூரி நுழைந்து விடுவார்கள். ஆனால் நீட்தேர்வு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது முதல் முயற்சியிலேயே மருத்துவ இடத்தைப் பெறத் துடிக்கும் மாணவர்கள் பின்தள்ளப்பட்டு அவர்களிடம் இடங்களை பறித்துச் சென்றுவிட்டனர்.
. நீட் தேர்வு என்பது கட்டாயமாக புகுத்தப்பட்டது. மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கும்,நீட்தேர்வுக்கும் சேர்த்து படித்து வேண்டியுள்ளது. முதன்முதலாக போட்டியிடும் புதியவர்கள் நீட் தேர்வில் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பின்பும் மருத்துவ கல்லூரி நுழைய முடியாத கொடுமை ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறுகிறது. அதாவது அரசு மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு செய்வதைப் போன்று முதல் முயற்சியில் போட்டியிடும் புதியவர்களுக்கு 70% இடங்களை ஒதுக்கீடு செய்தால் சிக்கலை எளிதில் தீர்த்து விடலாம் ..மீதமுள்ள 30 சதவீத இடங்களை மறுமுயற்சி செய்யும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் போதுமானது. இவ்வாறு புதியவர்க்கு ஒதுக்கப்படும் 70 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போல இருக்கலாம் .அதே போன்று 30% வழங்கப்படும் மறுமுயற்சியாளர்கள் உள் ஒதுக்கீடு வழக்கம் போல செய்து கொள்ளலாம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கு நம் தமிழக அரசு முன்வந்தால் நுழைவுத்தேர்வில் பின் தள்ளப்படும் புதிய மாணவர்கள் மிகுந்த பயன் அடைவார்கள் அவர்கள் உறிய மதிப்பையும் தகுந்த நேரத்தில் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
