விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன் கோயில் அருகே உள்ளது திருமலாபுரம். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் ஊரில் தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தனியாக ரேஷன் கடை அமைத்தால் தான் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவோம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த குடிமை பொருள் வழங்குதுறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தனர். இதனை பொதுமக்கள மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
